Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை

Siva
புதன், 1 ஜனவரி 2025 (08:50 IST)
லைசென்ஸ் இல்லாத சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம் என பிரிட்டன் அரசு நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 செயற்கைக்கோள் வழியாக இணைக்கப்பட்டு சாட்டிலைட் போன் இயங்கி வரும் நிலையில், ரேடியோ அலை வழியாக இயக்கப்படும் இந்த மொபைல் போன்களை லைசென்ஸ் இன்றி பயன்படுத்த இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஒரு சிலர் சட்ட விரோதமாக வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு பயன்படுத்தும் போது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிரிட்டன் வெளியுறவுத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியா செல்லும் பிரிட்டன் மக்கள் லைசென்ஸ் இன்றி சாட்டிலைட் போன்கள் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

சட்டவிரோதமாக சாட்டிலைட் போன் வைத்திருக்கும் பிரிட்டன் மக்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்றும், லைசென்ஸ் பெறாத செயற்கைக்கோள் வாயிலாக இணைக்கப்பட்டுள்ள சாதனங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

எனவே, இது போன்ற சாதனங்களை எடுத்துச் செல்லும் நபர்கள், பிரிட்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் உரிய அனுமதி பெற்று எடுத்துச் செல்லலாம் என்றும் அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை..!

சர்வாதிகாரத்தை சாமானிய மக்களிடையே மட்டும் காட்டும் திமுக அரசு: ஜெயக்குமார் கண்டனம்

இன்று 2025 புத்தாண்டு.. முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

புத்தாண்டில் ஒரு மகிழ்ச்சியான செய்தி: சிலிண்டர் விலை குறைப்பு!

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments