Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரிட்டன் பிரதமரின் உடல்நிலை மோசம்: நாடு முழுவதும் பதட்டம்

பிரிட்டன் பிரதமரின் உடல்நிலை மோசம்: நாடு முழுவதும் பதட்டம்
, செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (06:37 IST)
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து நேற்று போரிஸ் ஜான்சன் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது 
 
போரிஸ் ஜான்சன் அவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால்  அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் லண்டன் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் இன்று அதிகாலை முதல் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் இருப்பினும் அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்படவில்லை என்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் போரிஸ் ஜான்சன் தனது காதலியை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 55 வயது ஆன போரீஸ் ஜான்சன் உடல்நிலை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் நலம் விசாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கு உத்தரவு திடீர் நீட்டிப்பு: முதல்வரின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு