தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் செயல்படுத்தி வருவது போன்ற பள்ளி மாணவர்களுக்கான உணவு திட்டத்தை தனியாளாக தொடங்கியுள்ளார் பிரபல யூட்யூபர் மிஸ்டர் பீஸ்ட்.
இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பள்ளிகளில் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழக அரசால் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், அதை பிற மாநிலங்களும் பின்பற்ற தொடங்கியுள்ளன. இந்த திட்டதால் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதுடன், மாணவர்களின் கற்றல் திறனும் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த காலை உணவு திட்டத்தை ஆப்பிரிக்க நாட்டில் செயல்படுத்தியுள்ளார் உலக அளவில் பிரபலமாக உள்ள யூட்யூபரான மிஸ்டர் பீஸ்ட். மேற்கத்திய ஆப்பிரிக்காவில் பள்ளி பயில வேண்டிய வயதில் சிறுவர்கள் பலர் குழந்தை தொழிலாளர்களாக கோகோ தோட்டங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.
அவர்களை பள்ளி கல்வியின் பக்கம் ஈர்க்கவும், அவர்கள் பசியில்லாமல் படிக்கவும் இந்த காலை உணவு திட்டத்தை மிஸ்டர் பீஸ்ட் அறிவித்துள்ளார். இதற்கு முன்னரும் ஆப்பிரிக்க மக்கள் சமூக வளர்ச்சிக்காக மிஸ்டர் பீஸ்ட் பல உதவிகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K