Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமேசான் காட்டை கொளுத்தியது அந்த நடிகர்தான்! – கொளுத்தி போட்ட அதிபர்!

Advertiesment
அமேசான் காட்டை கொளுத்தியது அந்த நடிகர்தான்! – கொளுத்தி போட்ட அதிபர்!
, சனி, 30 நவம்பர் 2019 (14:59 IST)
அமேசான் காடுகளை கொளுத்தியது பிரபல ஹாலிவுட் நடிகர்தான் என பிரேசில் அதிபர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய காடாக அறியப்படும் அமேசான் காடுகள் கடந்த ஆகஸ்டு மாதம் பெரும் தீ விபத்தை சந்தித்தது. ஏகப்பட்ட தாவர வகைகள், விலங்கினங்கள் இந்த விபத்தில் அழிந்து போயின. காட்டில் வாழும் பழங்குடியின மக்கள் பலர் தங்கள் வாழ்விடங்களை இழந்தார்கள். உலகையே திரும்பி பார்க்க வைத்த அமேசான் காட்டுத்தீ பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
webdunia

இந்நிலையில் அமேசான் காட்டுத்தீ குறித்து சமீபத்தில் பேசிய பிரேசில் அதிபர் போல்சனேரோ ‘பிரபல ஹாலிவுட் நடிகட் டி காப்ரியோதான் அமேசான் காட்டை ஆள் வைத்து கொளுத்தினார்’ என பேசியுள்ளார். ஹாலிவுட்டில் மிகப்பெரும் நடிகராக வலம் வரும் லியானார்டோ டி காப்ரியோ, ஐ.நா சபையின் பருவநிலை மாற்றங்கள் குறித்த நல்லெண்ண தூதராகவும் செயல்பட்டு வருகிறார்.

டி காப்ரியோ பிரேசிலில் உள்ள சட்டத்திற்கு புறம்பான அமைப்புகளுக்கு நிதி அளித்து அமேசான் காட்டை கொளுத்தி விட சொன்னதாக அதிபர் ஆதாரம் இல்லாமலே பேசியிருக்கிறார். அமெரிக்காவின் மீது பிரேசில் அதிபர் பொல்சனேரோவுக்கு இருக்கும் பகையை அவர் இதன் மூலம் வெளிப்படுத்துவதாகவும், தன்னால் காட்டை காப்பாற்ற இயலாததற்கு டி காப்ரியோ மேல் அவர் பழி போடுவதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரேசன் அரிசியை ரோட்டில் கொட்டிய நபர்! – வைரலான வீடியோவால் வழக்குப்பதிவு!