பிரேசில் நாட்டில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் அந்த விமானத்தில் இருந்த 61 பேர் பலியானதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டில் உள்ள பரானா மாகாணத்தில் உள்ள கேஸ்கேவலில் என்ற பகுதியில் இருந்து கேரோலியா சென்ற பகுதிக்கு சாவு பாலோ சர்வதேச விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
ஏடிஆர் 72-500 என்ற பயணிகள் விமானத்தில் மொத்தம் 57 பயணிகள் மற்றும் 4 விமான நிறுவன ஊழியர்கள் பயணம் செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வானில் வட்டம் அடித்துக் கொண்டிருந்த இந்த விமானம் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழே வேகமாக வந்து நொறுங்கி விழுந்தது. இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்த 57 பயணிகள் மற்றும் நான்கு விமான நிலைய விமான நிறுவன ஊழியர்கள் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்த தகவல் அறிந்ததும் மீட்பு பணியினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.