சமீபத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது ஆவடி மார்க்க ரயில்களும் ரத்து செய்யபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் என பலருக்கும் அத்தியாவசிய போக்குவரத்துக்கு மின்சார ரயில்கள் பிரதான உதவியாக இருந்து வருகிறது. தற்போது தாம்பரம் ரயில் நிலையத்தை சீரமைக்கும் பணிகள் நடந்து வருவதால் தாம்பரம் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை செண்ட்ரல் மற்றும் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து இன்று இரவு 11.40, 11.50க்கு ஆவடி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
நாளை சென்னை செண்ட்ரல் - ஆவடி இடையேயான மின்சார ரயிலும், ஆவடி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. பட்டாபிராமில் இருந்து செண்ட்ரல் செல்லும் மின்சார ரயில், பட்டாபிராம் மில்லிட்டரி சைடிங் - ஆவடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
அதுபோல இன்று சூலூர்பேட்டையில் இருந்து இரவு 9 மணிக்கு செண்ட்ரல் வரும் மின்சார ரயில் ஆவடி, கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K