வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக பிராந்தி, விஸ்கி, பீர் ஆகியவர்றின் தயாரிப்பில் சுனக்கம் ஏற்பட்டுள்ளதாம்.
காக்நாக் பிராந்தி:
தென்மேற்கு பிரான்ஸில் 600 வருடம் பழமையான காக்நாக் பிராந்தியை தயாரிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வகை பிராந்தியை தயாரிக்க பயன்படும் திராட்சை அதிக வெப்பம் காரணமாக அதிக இனிப்பு தண்மை கொண்டவையாக மாறிவிடுவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்த் விஸ்கி:
இதேபோல் ஸ்காட்லாந்தில் விஸ்கி தயாரிப்பிலும் பருவநிலை மாற்றத்தால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. வறட்சியால் நல்ல தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நல்ல நீர் கிடைக்காததால் விஸ்கி தயாரிப்பாளர்கள் தங்கள் ஆலைகளை வெயில் காலத்தில் மூடும் நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
பீர்:
விஸ்கிக்கு ஏற்பட்ட அதே நிலைதான் பீர் தயாரிப்பிற்கும். நீர் தட்டுப்பாடு, விளைச்சல் பாதிப்பு ஆகிய காரணங்களால் பீர் தயாரிப்பாளர்கள் தயாரிப்பு இன்றி சரிவை சந்தித்துள்ளனர்.