Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாடு தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது - பிரபல நடிகர்

தமிழ்நாடு  தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது  -  பிரபல நடிகர்
, ஞாயிறு, 19 மே 2019 (14:18 IST)
உலகில் பெரும்பாலான நாடுகளில் தண்ணீர் இல்லாமல் திண்டாடி வருகிறது. அதில் முக்கியமான நகரம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் நகரம் ஆகும். இந்நிலையில் இதுகுறித்து பிரபல நடிகர் விவேக் கருத்துக்கூறியுள்ளார்.
உலகில் வெப்பமயமாதல் போக்கு அதிகமாகிவருகிறது. அதனால் அண்டார்டிக் கண்டத்தில் பனிமலைகள் உருகிவருவதாக ஆராய்சியாளர்கள், விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
இப்படி ஆளைக்கொல்லும் வெயில் அடிக்க மனிதன் தான் முக்கியக் காரணமாக இருக்கிறது. அதிலும் முக்கியமாக மரங்களைத் தனது தேவைகளுக்காகப் வெட்டியெடுக்கும் மனிதன் பதிலுக்கு ஒருமரத்தை நட்டுவைக்காமல் இருப்பதும் உலகில் மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.
webdunia
மேலும் மனிதன் பயன்படுத்தும் ஏசி, குளிர்சாசனப்பொருட்கள் போன்றவற்றால் பசுமைஇல்ல வாயுக்கள் அதிகமாகி பூமியின் வெப்பத்தை அதிகரித்து மழைப்பொழிவை தடுப்பதுதான் உலகில் உள்ள ஆறுகள் வற்றிப்போய் மக்கள் தண்ணீர் பஞ்சத்தில் தள்ளாடக் காரணம்.
 
இந்நிலையில் நடிகர் விவேக் கொடைக்கானலில் செய்தியாளர்களுடம் கூறியதாவது :
webdunia
விடுமுறை தினங்களில்  மற்றும் மாணவர் தன் பிறந்தநாளின் போது மரம் நட்டு கொண்டாட வேண்டும். தமிழகத்தில் ஏரிகுளங்களைத் தூர் வார வேண்டும்.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் நகரைப்போல் தமிழ்நாடும் தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடும் ரயிலில் செல்ஃபி மோகம்! உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!