இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில்வரும் வாரங்களில் கடுமையான உத்தரவுகள் வெளியாகலாம் என கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் தற்போது பரவ தொடங்கியுள்ள வீரியமிக்க கொரோனா வைரஸ் மேலும் பாதிப்பை அதிகரித்து வருகிறது. இதனால் லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நகரங்களில் கடுமையான ஊரடங்கு அமலில் உள்ளது.
லண்டனில் வீரியமிக்க கொரோனா தாக்கம் உள்ள சில பகுதிகளில் மட்டும் கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டு, பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடுமையான ஊரடங்கு இல்லாத பகுதிகளில் வழக்கம்போல பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா நிலவரம் குறித்து பேசியுள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன் எதிர்வரும் வாரங்களில் இங்கிலாந்து கடுமையான ஊரடங்கை பின்பற்ற வேண்டி வரும் என்றும் அதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.