Publish Date: Sun, 18 Sep 2016 (10:18 IST)
Updated Date: Sun, 18 Sep 2016 (10:27 IST)
அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகருக்கு அருகில் செல்சி என்ற பகுதியில் நேற்று சனிக்கிழமை சக்திவாய்ந்த குண்டுவெடித்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் 29 பேருக்கு மேல் படுகாயமடைந்துள்ளனர். இது அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
குண்டுவெடிப்பு குறித்து தகவல் கிடைத்ததும், காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்ததோடு, இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.