மனிதர்களிடமிருந்து வெளியேறும் சிறுநீர் மூலம், பீர் தயாரிக்கும் எந்திரம் பெல்ஜியம் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா? சிறுநீரிலிருந்து பீர் தயாரித்தால் யார் குடிப்பது என்று யோசிக்கிறீர்களா?
நமக்குத்தான் அது உவ்வே... ஆனால், பெல்ஜியம் நட்டின் ஜெண்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இரவு பகலாக ஆராய்ச்சி செய்து இப்படியொரு வினோத இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த இயந்திரத்தை அங்கு நடைபெறும் இசை திருவிழாவிலும் காட்சிக்கு வைத்துள்ளனர்.
மனிதர்களின் சிறுநீரகத்தை அந்த இயந்திரம் சோலார் சக்தியின் மூலம் முதலில் சூடுபடுத்தும். அதன்பின் சிறுநீரகத்தில் இருக்கும் பொட்டாசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் மற்றும் தண்ணீரை தனியாக பிரித்து எடுத்து, அதன் மூலம் பீர் தயாரிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கூறினர். மேலும், அதிலிருந்து உரமும் தயாரிக்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.