Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அப்துல்கலாம் அஞ்சலி ; இலவச கட்டிங் சேவிங் அறிவித்த சலூன்காரர்

Advertiesment
அப்துல்கலாம் அஞ்சலி ; இலவச கட்டிங் சேவிங் அறிவித்த சலூன்காரர்
, புதன், 27 ஜூலை 2016 (17:31 IST)
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு, கரூரில் இலவச கட்டிங் சேவிங் செய்து வருகிறார் ஒரு பார்பர் ஷாப் உரிமையாளர்.


 

 
ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நாடு முழுவதும் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகின்றது. 
 
இந்நிலையில் ஒவ்வொரு, தமிழனும், ஒவ்வொரு விதமாக அவரது மறைவையும், நினைவையும் உணர்வுகளாக வெளிப்படுத்தி வரும் நிலையில் கரூர் ராமானூர் பகுதியில் அழகு நிலையம் நடத்தி வரும் சுரேஷ் (வயது 30), என்னும் வாலிபர் தன்னுடைய சலூன் கடையில் இன்று அவரது நினைவை பறைசாட்டும் வகையில் வாடிக்கையாளர்கள் அனைவருக்கு அப்துல்கலாமின் நினைவு நாளையொட்டி இலவச கட்டிங், சேவிங் என்று வாசகங்கள் அடங்கிய விளம்பரத்தை கடையின் முன் வைத்து சுமார் 100 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக செய்தார்.

webdunia

 

 
இது பற்றி அவர் கூறுகையில் ”அப்துல்கலாமின் இறப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல, ஒவ்வொரு மனிதனும் வாழ்விற்கு பின்பும், வாழ்க்கையை எடுத்துரைக்கும் வகையில் அவர் சிறந்து முறையில் வாழ்ந்து உள்ளார். இவரது நினைவு நாளை முன்னிட்டு இன்று ஒரு நாள் இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு கட்டிங், சேவிங் செய்து வருகிறேன். அவர் இறந்த போது எனது கடைக்கு விடுமுறை அளித்து அஞ்சலி செலுத்தினேன். அடுத்த வருடம் வசூல் செய்யும் பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு மற்றும் படிப்பிற்கான பாடப்புத்தகங்களை வழங்க இருக்கிறேன்” என்று கூறினார்.
 
ஒவ்வொருவரும் மறைந்த மக்கள் குடியரசுத்தலைவரின் அஞ்சலியை வித்யாசமாக அனுசரித்து வரும் நிலையில் இவரது முதலாமாண்டு நினைவஞ்சலி மிகவும் உணர்ச்சி வசமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சி.ஆனந்தகுமார் – செய்தியாளர் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகர்களுக்கு டிக்கெட் இல்லையா? : கொந்தளித்த இயக்குனர் ரஞ்சித்