ஒரே நாளில் ஒபாமா சம்பாதித்த 11 ஆயிரம் டாலர்கள்

புதன், 15 நவம்பர் 2017 (23:40 IST)
அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஒபாமா செய்து வரும் பல வேலைகளில் ஒன்று டூடுல் வரைவது. பென்சிலால் தத்ரூபமாக வரையும் டூடில் ஓவியக்கலையில் வல்லவரான ஒபாமா, தான் வரைந்த டூடுல்களை நேற்று ஏலம் விட்டார்.


 


'மேக்கிங் அமெரிக்கா' என்ற அவருடைய ஒரே ஒரு டூடுல் மட்டுமே 11ஆயிரம் டாலருக்கு ஏலம் போயுள்ளது. 5x8 அளவில் வெள்ளை பேப்பரில் வெள்ளை மாளிகையுடன் கூடிய அவர் வரைந்த இந்த டூடுல் மிகவும் புகழ்பெற்றது.

மேலும் அவர் வரைந்த இன்னொரு டூடுலும் விரைவில் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டூடுல் 8 ஆயிரம் டாலர் வரை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மொபைல் எண்களை ஆதாருடன் இணைக்கவில்லையா? இதோ 3 புதிய வழிகள்