Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முன்னாள் அதிபர், தற்போது குற்றவியல் மற்றும் சிவில் வழக்கு நீதிபதி: ஒபாமா!!

முன்னாள் அதிபர், தற்போது குற்றவியல் மற்றும் சிவில் வழக்கு நீதிபதி: ஒபாமா!!
, திங்கள், 30 அக்டோபர் 2017 (11:08 IST)
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிற்கு, இல்லினாய் மாகாணத்தில் நீதிபதி பதவி வகிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அப்பணியை ஏற்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் நீதிமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 


 
 
இதுகுறித்து தெளிவான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், அடுத்த மாதம் குக் கவுண்டிக்கு ஒபாமா வருகைத்தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
56 வயதாகும் ஒபாமாவிற்கு சிகாகோ மற்றும் வாஷிங்டன் டி சியில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. சிவில் அல்லது குற்றவியல் வழக்குகளுக்காக அவர் அழைக்கப்படலாம் என தெரிகிறது.
 
வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய பிறகு, முன்னாள் அதிபர்கள் கிளிண்டன் மற்றும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோருக்கும் இதுபோன்ற நீதிபதி பணிகளுக்கான அழைப்புகள் வந்தன.
 
ஹார்வர்ட் சட்டக்கல்லூரியில் பட்டம்பெற்ற ஒபாமா, செனட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்குமுன் 12 ஆண்டுகள் சிகாகோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். சிவில் உரிமைகளுக்கான வழக்கறிஞராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
 
'ஒரு குடிமகனாகவும், இந்த சமூகத்தில் ஒருவராகவும், தனது கடமையை செய்ய இருப்பதாக அவர், தனது பிரதிநிதிகள் மூலம், மிகவும் தெளிவாக கூறியுள்ளார்.` என்று சிகாக்கோ ட்ரிப்யூன் பத்திரிக்கையிடம், குக் கவுண்டி தலைமை நீதிபதி டிமோதி எவான்ஸ் தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் கூறுகையில், முன்னாள் அதிபரின் பாதுகாப்பிற்குதான் முன்னுரிமை என்றார். இது குறித்து, ஒபாமாவின் செய்திதொடர்பாளர் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
 
இந்த கவுண்டியில் நீதிபதியாக பணியாற்றுபவர்களுக்கு, ஒருநாளுக்கு 17.25 டாலர் சம்பளமாக வழங்கப்படும். 2004 ஆம் ஆண்டு, குக் கவுண்டி நீதிமன்றத்தில், பிரபல தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரீ ஒரு கொலை வழக்கை நீதிபதியாக இருந்து விசாரித்தார் என்று என்.பி.ஆர் தெரிவிக்கிறது.
 
ஜனவரி மாதம், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய ஒபாமா, கோடீஸ்வரர் ஒருவருடன் நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவது, இந்தோனேஷியாவில் குடும்பத்துடன் சுற்றுலா செல்வது போன்று தனது நேரத்தை செலவிட்டு வருவதைப் பார்க்க முடிந்தது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்தார் கருணாநிதி