நியூயார்க்கில் உள்ள வங்கதேச தூதரகத்தில் திடீரென போராட்டக்காரர்கள் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் அந்த அறிவிப்பு வெளியானவுடன் மாணவர்கள் கொந்தளித்தனர் என்பதும் இந்த போராட்டம் வன்முறையாக மாறி அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் திடீரென நியூயார்க்கில் உள்ள வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருவதாகவும் ஷேக் ஹசீனாவின் உருவப்படங்கள் மற்றும் அவருடைய பொருட்களை வங்கதேச தூதரகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிகிறது.
இந்த போராட்டம் வலுத்ததை அடுத்து உடனடியாக அமெரிக்க அதிகாரிகள், ஷேக் ஹசீனாவின் உருவப்படத்தை அகற்றியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதன் பின்னரே போராட்டக்காரர்கள் கலைந்து சென்றதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா மட்டுமின்றி இன்னும் சில நாடுகளில் உள்ள வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் அந்தந்த நாட்டின் தூதரகத்தில் போராட்டம் நடத்தி வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.