Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வங்கதேச வன்முறைக்கு வெளிநாட்டு சதி தான் காரணமா? ராகுல் கேள்விக்கு ஜெய்சங்கர் பதில்..!

Advertiesment
வங்கதேச வன்முறைக்கு வெளிநாட்டு சதி தான் காரணமா? ராகுல் கேள்விக்கு ஜெய்சங்கர் பதில்..!

Mahendran

, செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (12:22 IST)
வங்கதேச வன்முறைக்கு வெளிநாட்டு சதி காரணமா? என இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
வங்கதேசத்தில் நிலவும் வன்முறை மற்றும் அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை செய்ய இன்று டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் கூடியது. 
 
இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட சில அமைச்சர்களும் ராகுல் காந்தி உள்பட சில எதிர்க்கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். 
 
இன்றைய கூட்டத்தின் போது ராகுல் காந்தி மத்திய அமைச்சர் ஜெயசங்கரிடம் ’வங்கதேசத்தில் ஏற்பட்ட போராட்டம் வன்முறையாக மாறி ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததில் வெளிநாட்டு சதி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
 
இதற்கு பதில் அளித்த ஜெய்சங்கர் இப்போதைக்கு எதையும் உறுதி செய்ய முடியாது என்று தெரிவித்தார். அதன்பின்னர்  வங்கதேசத்தில் நடைபெறும் வன்முறைக்கு இந்திய தரப்பிலிருந்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அனைத்து கட்சி தலைவர்களிடமும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. தப்பி ஓடிய மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..!