Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தை தோளில் குழந்தை… துப்பாக்கி நீட்டும் போலீஸார்..வைரலாகும் போட்டோ

Webdunia
செவ்வாய், 2 ஜூன் 2020 (19:02 IST)
நான் எடுத்த இந்த போட்டோ தான் நான் எடுத்த இதுவரை எடுத்த புகைப்படங்களில் சிறந்தது என அமெரிக்க புகைப்படக் காரர் ஒருவர்  தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கருப்பினத்தவர் ஒருவரை போலீஸார் கைது செய்த போது இறந்த நிலையில் போலீஸாருக்கு எதிரான போரட்டங்கள் அமெரிக்காவின் பல மாகாணங்களில் வெடித்துள்ளது.

மினசோட்டா மாகாணத்தின் மின்னபோலீஸ் பகுதியில் வாழ்ந்து வந்த கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்ட். கடந்த திங்கட்கிழமையன்று இவரை ஒரு விசாரணைக்காக போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது “அவர் கள்ளப்பணம் வைத்திருந்ததாக கருதி விசாரணைக்காக கைது செய்தோம். அப்போது அவர் உடல்நல குறைவால் இறந்துவிட்டார்” என கூறியுள்ளனர். ஆனால் ஜார்ஜ் ஃப்ளாயிடை அவர்கள் மூர்க்கத்தனமாக தாக்கியதாக அந்த பகுதியில் உள்ளவர் தெரிவித்தனர்.

அவர்கள் தெரிவித்ததின் படி ஜார்ஜ் ஃபிளாயிடை போலீஸார் கைது செய்தபோது மூர்க்கமாக தாக்கியுள்ளனர். மேலும் ஒரு காவலர் ப்ளாயிடை கீழே தள்ளி அவர் கழுத்து மேல் கால் மூட்டை வைத்து அழுத்தியுள்ளார். இதனால் மூச்சு திணறிய ப்ளாயிட் மூச்சு விட முடியவில்லை என்றும், என்ன கொன்று விடாதீர்கள் என்றும் கெஞ்சியுள்ளார். அவர் தாகமாய் இருக்கிறது என தண்ணீர் கெட்டதற்கு கூட அருகிலிருந்தவர்களை தண்ணீர் கொடுக்க காவலர்கள் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது, இந்நிலையில் போலீஸார் அழைத்து சென்ற சிறிது நேரத்திலேயே ப்ளாயிட் உயிரிழந்தார்.



இதை தொடர்ந்து போலீஸ் காவல்துறையுடனான ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது மினசோட்டா பல்கலைகழகம். தொடர்ந்து இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருபவர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் புகழ்பேற்ற புகைப்படக் கலைஞர், தனது டுவிட்டர் பக்கத்தில் நான் எடுத்த இந்த போட்டோ தான் நான் எடுத்த இதுவரை எடுத்த புகைப்படங்களில் சிறந்தது என அமெரிக்க புகைப்படக் காரர் ஒருவர்  தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ஒருவர் தன் குழந்தையை தோளில் வைத்துக் கொண்டு நிற்கிறார், ஒரு குழந்தை அவர் தோளின் மீதுஅமர்ந்துள்ளது போன்று உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments