Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிறந்த குழந்தையை கொன்று லாக்கரில் பூட்டி வைத்த கொடூர தாய்!

Advertiesment
பிறந்த குழந்தையை கொன்று லாக்கரில் பூட்டி வைத்த கொடூர தாய்!
, சனி, 2 ஜூன் 2018 (14:26 IST)
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இளம் பெண் ஒருவர் கழிப்பறையில் குழந்தையை பிரசவித்து, அதை கொன்று லாக்கரில் பூட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
டோக்கியோவில் உள்ள விடுதி ஒன்றின் லாக்கரில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், உணவு விடுதி ஊழியர்கள் லாக்கரை உடைத்து சோதனையில் ஈடுபட்டனர். 
 
அந்த லாக்கரில் அழுகிய நிலையில், பச்சிளம் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் பின்னர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் சிசிடிவி கேமராவின் பதிவில் சோதனை செய்த போது உண்மை வெளியாகியது. 
 
அந்த பெண்ணை கைது செய்து விசாரித்த போது, அந்த பெண் கூறிய விஷயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் அந்த பெண் கூறியது பின்வருமாறு, என் குடும்பத்திற்கு இந்த குழந்தையால் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக கழிவறையில் பிரசவித்தேன், குழந்தையை வெளியே கொண்டு செல்ல முடியாத காரணத்தால் குழந்தையை கொன்று லாக்கரில் பூட்டி வைத்தேன் என கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விசாரணை படம் போல் சிறுமியை கொடுமைபடுத்தி போலீஸார் அட்டுழியம்