Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோகோ கோலா நிறுவனத்தின் முதல் மதுபானம்! இளம்பெண்களை குறிவைக்கின்றதா?

Advertiesment
லெமன் டூ | மதுபானம் | ஜப்பான் | கோகோ கோலா | Lemon Do | first alcoholic drink | coco cola japan | coca cola
, திங்கள், 28 மே 2018 (16:48 IST)
கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக குளிர்பான தயாரிப்பில் உலகின் முன்னனி இடத்தில் உள்ள கோகோ கோலா நிறுவனம் முதல்முறையாக மதுபானம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. முதலில் ஜப்பான் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மதுபானம் படிப்படியாக உலகின் அனைத்து நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
 
3%, 5% மற்றும் 7% ஆல்கஹால் உடன் மூன்று விதமான பானங்களை அறிமுகம் கோகோ கோலா நிறுவனம் செய்துள்ளது. இந்த மதுபானத்தில் எலுமிச்சை சுவை உள்ளதால் இதனை இளம்பெண்கள் அதிகம் விரும்புவார்கள் என்று அந்த நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.
 
webdunia
ஜப்பானில் 350 மிலி கொண்ட மதுபான பாட்டில் 150 யென் என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.93 என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தியாவில் கோகோ கோலா நிறுவனத்தின் குளிர்பான தயாரிப்புகளுக்கு எதிர்ப்புகள் இருந்து வரும் நிலையில் இந்த மதுபானம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் எதிர்ப்புகள் வலுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக பெண்ணிடம் தோசை கேட்ட மோடி