உலகின் முதல் ஃபிட்ஜட் ஸ்பின்னர் மொபைல் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹாஙாங் நாட்டைச் சேர்ந்த சில்லி என்ற மொபைல் நிறுவனம் இந்தியாவில் K188 மற்றும் Fo5 என்ற இரண்டு புதிய மாடல் மொபைல்களுடன் களமிறங்கியுள்ளது. இந்த K188 மாடல் மொபைல் போன் ஸ்பின்னர் என்ற அழைக்கக்கூடிய விளையாட்டு பொருள் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த மொபைல் போனின் நடுவில் உள்ள பொத்தானை அழுத்தினால் விசிறி போன்று வேகமாக சுழலும் தன்மை கொண்டது. மன அழுத்தத்தை உள்ளவர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விளையாட்டு பொருள்தான் இந்த ஸ்பின்னர். அந்த ஸ்பின்னர் வடிவில் தற்போது மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது சில்லி நிறுவனம்.
குறைவான விலையில் எளிதில் கவரும் வகையில் இந்த மொபைல் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.