இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பகுதியில் நடந்து கொண்டிருந்த பாப் இசை நிகழ்ச்சியின்போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததால் சம்பவ இடத்திலேயே 20 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் 50 பேர் படுக்காயம் அடைந்துள்ளதாகவும் காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
மேலும் இந்த சம்பவம் தீவிரவாதிகளின் கைவரிசைதான் என்பது உறுதியாகியுள்ளதாக மான்செஸ்டர் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வெடிகுண்டு சம்பவத்தால் ஏற்பட்ட குழப்பத்தில் பலர் காணாமல் போயிருப்பதாகவும், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க @gmpolice என்ற டுவிட்டர் அக்கவுண்டை பயன்படுத்துமாறும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இங்கிலாந்து நேரப்படி 22ஆம் தேதி இரவு 10.35க்கு நடந்த இந்த தாக்குதல் இங்கிலாந்து நாட்டை மட்டுமின்றி உலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த தாக்குதல் ஒரு கோழைத்தனமான தாக்குதல் என்று உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.