Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனைத்து பள்ளிகளிலும் 'பகவத் கீதை' கட்டாயம்! நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்

அனைத்து பள்ளிகளிலும் 'பகவத் கீதை' கட்டாயம்! நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்
, செவ்வாய், 23 மே 2017 (05:06 IST)
பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே மதவாத கருத்துக்கள் மக்களிடம் திணிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. யோகாவை அனைத்து பள்ளிகளிலும் திணிப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் பகவத்கீதையை கட்டாயமாக்க வேண்டும் என்று பா.ஜ.க எம்.பி.ரமேஷ்பிதுரி என்பவர் பாராளுமன்றத்தில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 


அந்த மசோதாவில் குறிப்பிட்டுள்ளதாவது: கீதையிலுள்ள தத்துவங்கள் இன்றைய தலைமுறைக்கு அவசியமானது என்பதால் அனைத்து பள்ளிகளிலும் பகவத் கீதையை கட்டாயமாக்க வேண்டும், அதனுடைய சாராம்சம் கொண்ட பாடங்களை நீதிபோதனை வகுப்புகளில் கற்பிக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இதை நடைமுறைப்படுத்த தவறும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற வரிகள் நாட்டின் அனைத்து பள்ளி நிர்வாகிகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக கருதப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காமராஜ் கட்டமைப்பை பாழாக்கியவர்கள் நடிகர்கள்: சுப்பிரமணியம் சுவாமி