Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விபத்தில் சிக்கிய நபர்: மெசேஜ் அனுப்பி காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!

Advertiesment
விபத்தில் சிக்கிய நபர்: மெசேஜ் அனுப்பி காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!
, வெள்ளி, 1 அக்டோபர் 2021 (09:03 IST)
விபத்தில் சிக்கிய நபர்: மெசேஜ் அனுப்பி காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!
விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மயக்கமடைந்த ஒருவரை அவர் கட்டியிருந்த வாட்ச் அவசர எண்ணிற்கு மெசேஜ் அனுப்பி காப்பாற்றிய சம்பவம் சிங்கப்பூரில் நடந்துள்ளது 
 
சிங்கப்பூரை சேர்ந்த முகமது ஃபிட்ரிக் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென விபத்துக்குள்ளாகி மயக்கம் அடைந்தார். அவர் கட்டியிருந்த வாட்ச் உடனே SOS வசதி மூலம் அவசர எண்ணுக்கு தகவல் அனுப்பியது. மேலும் விபத்து நடந்த இடத்தின் லொகேஷனையும் அனுப்பி உள்ளது
 
இதனை இடத்தை அந்த இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆப்பிள் வாட்ச்சில் உள்ள SOS என்ற வசதி சில அதிர்வுகள் ஏற்படும் போது தானாகவே அவசர எண்ணுக்கு தகவல் அனுப்பி விடும் என்பதும் அதன் மூலம் தான் முகமது தற்போது காப்பாற்றப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனமழை எதிரொலி: பள்ளிகள் இன்று விடுமுறை!