ஆப்பிள் ஐபோனின் அலாரம் வேலை செய்யவில்லையா? உலகம் முழுவதும் குவியும் புகார்..!

Mahendran
வியாழன், 2 மே 2024 (13:40 IST)
ஆப்பிள் ஐபோனில் உள்ள அலாரம் வேலை செய்யவில்லை என்றும் அதனால் காலதாமதமாக நாங்கள் அலுவலகம் செல்வதாக உலகம் முழுவதிலும் இருந்து பலர் புகார் அளித்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக ஆப்பிள் ஐபோன்களில் அலாரம் செயல் இழந்து விட்டதாக குற்றச்சாட்டுகள் குவிந்து வரும் நிலையில் இது அவ்வப்போது ஏற்படும் ஏற்படும் சின்ன பிரச்சனை தான் என்றும் இதனை சரி செய்து விடுவோம் என்று ஆப்பிள் ஐபோன் விளக்கம் அளித்துள்ளதாது 
 
 ஐபோனில் இருக்கும் கடிகார செயலி வேலை செய்யவில்லை என்றும் அதனால் அலாரம் அடிக்க வேண்டிய நேரத்தில் அடிக்காததால் வாடிக்கையாளர்கள் தாமதமாக எழுந்து அலுவலகம் செல்வதாகவும் குற்றச்சாட்டு குவிந்து வருகிறது 
 
இதற்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்றும் ஐஓஎஸ் அப்டேட் செய்ததும் அலாரம் சரியாகிவிடும் என்றும் வாடிக்கையாளர்கள் கவலை கொள்ள தேவையில்லை என்றும் ஆப்பிள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் அலாரம் ஏன் இயங்கவில்லை என்பதற்கான காரணத்தை ஆப்பிள் நிறுவனம் இதுவரை தெரிவிக்காமல் இருப்பது பயனாளிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் பணியில் வேகம் காட்டும் தவெக!. விரைவில் வேட்பாளர் பட்டியல்!...

6,000 கோடி ரூபாய் ஊழல்.. மது வியாபாரிகள் சங்கம் பகீர் குற்றச்சாட்டு..!

4 மாத கர்ப்பிணியாக இருந்து காவல்துறை கமாண்டோ.. கணவரால் அடித்து கொல்லப்பட்ட கொடூரம்..!

விமான விபத்தில் மறைந்த அஜித் பவார் மனைவிக்கு துணை முதல்வர் பதவியா?

கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதால் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது: விஜய் அறிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments