பெங்களூரில் பழுதான ஐ போன் 13ஐ மாற்றித்தர இழுபறி செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் முன்னணி தொழில் நுட்ப நிறுவனம் ஆப்பிள். இந்த நிறுவனத்தின் சார்பில் விற்பனை செய்யப்படும் ஐ போன்கள், ஐபேட், வாட்ச்கள்,ஐ மேக், மிகவும் புகழ்பெற்றவை.
இந்த நிறுவனத்தின் அத்தனை தயாரிப்புகளும் மக்களிடையே பிரபலம் மற்றும் தரமானவை என்பதால் மக்களும் இதன் பொருட்கள் விற்பனையாகும் அன்றே எப்படியாவதும் வாங்க முயற்சிக்கிறார்கள்.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் பழுதான ஐபோன் 13 ஐ மாற்றித்தர இழுபறி செய்த ஆப்பிள் சேவை மையத்தின் மீது வாரண்டி ஒரு ஆண்டுகள் இருந்தும் அதைச் சரி செய்து கொடுக்க பணம் கேட்டதாக, ஆவேஸ் கான் என்ற நபர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவருக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. எனவே அந்த நபர் இழப்பீடு பணத்தை பெற்றதாக தகவல் வெளியாகிறது.