Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

Apple-ன் புதிய VR ஹெட்செட்டை புகழ்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்

Apple-ன் புதிய VR ஹெட்செட்டை புகழ்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்
, புதன், 1 நவம்பர் 2023 (14:05 IST)
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய VR ஹெட்செட்டை  இசையமைப்பாளர் புகழ்ந்துள்ளார்.
 

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர், ஸ்லம் டாக் மில்லியனர் என்ற படத்திற்கு இசையமைத்ததற்காக 2 ஆஸ்கர் விருதைப் பெற்று சாதனை படைத்தார்.

தற்போது, தமிழ், இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவரது இசையமைப்பில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 ,  பத்துதல படங்களுக்கு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களுக்கு இசையமைத்திருந்தார்.

அடுத்து, கமல்- மணிரத்னம் இணையவுள்ள கமல்234 என்ற படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இதன் அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில், உலகம் முழுவதும்  பரவலாக அறியப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய VR ஹெட்செட்டான Apple vision proவை பயன்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான் இது நம்ப முடியாத அற்புத அனுபவத்தைக் கொடுத்ததாக தன் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியனா இருந்தா போதும்.. விசா இல்லாம இத்தனை நாடுகளுக்கு போகலாமா?