Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் ஒரு காலிஸ்தான் பயங்கரவாதி கொலை! – கனடாவில் தொடரும் பதற்றம்!

Advertiesment
Khalistani
, வியாழன், 21 செப்டம்பர் 2023 (11:57 IST)
கனடாவில் சீக்கிய குருத்வாரா தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே இந்தியா – கனடா உறவில் விரிசல் எழுந்துள்ள நிலையில் மற்றுமொறு காலிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளார்.



சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் காலிஸ்தான் அமைப்புகளில் ஒன்று கேடிஎப் என்ற காலிஸ்தான் புலி படை அமைப்பு. இதன் தலைவராக செயல்பட்டவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார்.

இந்த நிஜ்ஜார் கனடாவில் தலைமறைவாக இருந்த நிலையில் இந்தியாவில் ஒரு சாமியாரை கொல்ல முயன்றது உள்ளிட்ட பல குற்றங்களுக்காக தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த பட்டியலை இந்திய அரசு கனடாவுக்கும் அனுப்பி வைத்தது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் நிஜ்ஜார் கனடாவில் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜ்ஜாரை கனடா குடிமகன் என்றும், அவரை கொலை செய்ததில் வெளிநாட்டு (இந்தியா) தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக இந்திய தூதர் ஒருவரையும் அவர் வெளியேற்றியுள்ளார். பதிலுக்கு இந்தியாவும் கனடா தூதரை வெளியேற உத்தரவிட்டுள்ளது.’

இதனால் இரு நாடுகள் இடையேயான உறவு நிலையில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது கனடாவில் வசித்து வந்த மற்றோரு காலிஸ்தான் பயங்கரவாதியான சுக்தூல் சிங் என்பவர் 2 கும்பல்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டுள்ளார். இதனால் கனடாவில் மேலும் பரபரப்பு எழுந்துள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை காங்கேசன்துறை இடையேயான படகு சேவை.. அண்ணாமலை மகிழ்ச்சி..!