Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் மகன் சஞ்சய் இயக்கும் படத்தின் ஹீரோ இவரா? வெளியாகும் தகவல்

vijay- sanjay
, வியாழன், 14 செப்டம்பர் 2023 (18:12 IST)
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகவுள்ள படத்தில் இளம் ஹீரோ நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவரது மகன் சஞ்சய். சமீபத்தில் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த  நிலையில், சமீபத்தில் ’டிரிக்கர்’ என்ற  குறும்படம் இயக்கினார்.

இதையடுத்து,  நடிகர் விஜய்யின் மகன்   சஞ்சயும் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

தமிழ் சினிமாவின் புதிய இயக்குனராக சஞ்சய் அறிமுகமாகவுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் இப்படத்தின் ஹீரோவாக கவின்  நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

அதேபோல் இப்படத்திற்கு முதலில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் இசையமைப்பார் என்று கூறப்பட்ட நிலையில்,  அனிருத் இப்படத்திற்கு இசையமைப்பார் என்ற தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லியில் வழக்கறிஞர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை: என்ன காரணம்?