Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''ஆறு அடி உயரம்...நட்சத்திர கண்கள்'' ஏஐ ரோபோவை திருமணம் செய்த பெண்...

Advertiesment
american women ai robo
, புதன், 7 ஜூன் 2023 (14:44 IST)
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் செயற்கை நுண்ணறிவு ரோபோவை திருமணம் செய்துள்ளார்.

இந்த  உலகில் தினமும் விசித்திரமான  நிகழ்வுகள் நடந்து கொண்டிருதான் இருக்கின்றன. அந்த வகையில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ரோசன்னா ரமோஸ்(36) என்ற பெண்மணிக்கு சக்தி வாய்ந்த அல்காரிதம்கள் மற்றும் இயந்திர கற்றல் திறன்கள் பயன்படுத்துவதில் ஆர்வம் அதிகம்.

இந்த  நிலையில், அவரது விருப்பம் மற்றும் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் திறனுடைய செயற்கை நுண்ணறிவு ரோபோ ஒன்றை உருவாக்கினார்.  அதற்கு எரன் கார்டல் என்று பெயரிட்டார்.

தற்போது, அந்த செயற்கை நுண்ணறிவு ரோபோவை மெய் நிகர் காதலராக ( நட்சத்திர கண்கள் கொண்ட,6.3'' அடி உயரம் கொண்ட எரன் கார்டன்  ) ஏற்றுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு சாட்பாட் மென்பொருளான ரெபிலிகாவை பயன்படுத்தி அவர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இப்பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விளைநிலத்தில் கிடைத்த 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம்...விவசாயிக்கு அடித்த அதிர்ஷ்டம்