Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இஸ்ரேல் தாக்குதல் - அமெரிக்க ராணுவ வீரர் தீக்குளிப்பு!

Advertiesment
Aaron Bushnell

Sinoj

, புதன், 28 பிப்ரவரி 2024 (16:24 IST)
காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்து, அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் முன் அமெரிக்க வீரர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இஸ்ரேல் நாட்டின்  மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் ஆண்டு  ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தியதுடன், இஸ்ரேல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து,  ராணுவவீரர்கள் மற்றும் குழந்தைகளை கொன்றனர்.
 
அதன்பின்னர், 240 பேரை பிணைக் கைதிகளாக காஸா முனைக்கு கொண்டு வந்தனர்.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நாடு ராக்கெட் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பல நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியும் காஸா மீது உக்கிரமுடன் தாக்குதலை நடத்தி வருகிறது.
 
இந்த நிலையில், காஸா முனையில்  டேர் அல் பலாஹ் நகரின் ஜவைதா பகுதியில் உள்ள அகதிகள் முகாமைக் குறிவைத்து, இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில்,  காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்து, அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் முன் அமெரிக்க வீரர் தீக்குளித்தார். இந்த  சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இறந்த அமெரிக்க ராணுவ வீரர்  ஆரோன் புஸ்னெல்(25)-க்கு உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் இரங்கல் கூறி வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதிர்க்கட்சித்தலைவர் உள்பட 15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்: இம்மாச்சல பிரதேச சபாநாயகர்..!