Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

வேலை பறிபோன ஆத்திரத்தில் முதலாளியின் விலையுயர்ந்த காரை சுக்குநூறாய் நொறுக்கிய தொழிலாளி

Advertiesment
அமெரிக்கா
, புதன், 13 மே 2020 (20:33 IST)
முதலாளியின் விலையுயர்ந்த காரை சுக்குநூறாய் நொறுக்கிய தொழிலாளி
வேலையை விட்டு தூக்கிய முதலாளியின் விலையுயர்ந்த காரை தொழிலாளி ஒருவர் சுக்குநூறாக நொறுக்கி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உலகிலேயே கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் பலர் வேலை வாய்ப்புகளை இழந்து வருகின்றனர். இந்த நிலையில் சிகாகோ நகரில் டிரக் ஓட்டுனராக பணிபுரிந்த ஒருவர் திடீரென வேலையில் இருந்து தூக்கப்பட்டார். இதனால் முதலாளி மீது ஆத்திரமடைந்த அந்த ஓட்டுநர், முதலாளியின் விலையுயர்ந்த காரரை டிரக்கால் மோதி இடித்து தள்ளி சுக்கு நூறாகி விட்டார்
 
பல லட்சம் மதிப்புள்ள அந்த கார் உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு டேமேஜ் ஆனது.  இதுகுறித்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்த தொழிலாளி கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். ஊரடங்கு காரணமாக தன்னை தனது முதலாளி வேலையை விட்டு தூக்கிவிட்டதாகவும், இதனால் ஆத்திரத்தில் முதலாளியின் காரை அவ்வாறு சுக்குநூறாக நொறுக்கியதாகவும், விசாரணையில் அந்த தொழிலாளி கூறியுள்ளார் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிதியமைச்சர் அறிவித்த சிறப்பு பொருளாதார தொகுப்பு ஏமாற்றம் அளிக்கிறது – ப. சிதம்பரம்