அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகி விடுவார் என்று முன்பே கணித்த ஜோதிடர் தற்போது டொனால்ட் டிரம்ப் தான் அடுத்த அமெரிக்க அதிபர் என்று கணித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் முதலில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரும் மோதுவதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களாக ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகிய நிலையில் தற்போது கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜோ பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவார் என்பதை கடந்த சில வாரங்களுக்கு முன்பே கணித்த ஏமி ட்ரிப் என்ற அமெரிக்க ஜோதிடர் தற்போது டொனால்ட் டிரம்ப் அடுத்த அதிபராக பதவி ஏற்பார் என்று கணித்துள்ளார்.
அதுமட்டுமின்றி வரும் நாட்களில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் உடல்நலக்குறைவு உள்ளிட்ட சில சிரமங்களை எதிர்கொள்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் தான் தேர்தல் நேரத்தில் ஜோதிடங்கள் கணிக்கப்படுகிறது என்றால் அமெரிக்காவிலும் ஜோதிடர்கள் தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்களை தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.