அமெரிக்க அதிபர் தேர்தல் ; ஓட்டு எண்ணிக்கை தொடக்கம் : ஹிலாரி முதலிடம்
அமெரிக்க அதிபர் தேர்தல் ; ஓட்டு எண்ணிக்கை தொடக்கம் : ஹிலாரி முதலிடம்
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் அமெரிக்காவில் இன்று நடந்தது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும்(68), குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்பும்(68) களத்தில் உள்ளனர். அவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் தனிப்பட்ட விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் வைத்து மிகவும் பரபரப்பாக இருந்தது இந்த தேர்தல் பிரச்சாரக்களம்.
மொத்தம் 14 கோடியே 63 லட்சத்து 11 ஆயிரம் பேர் வாக்களிக்கிறார்கள். அங்கு மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணத்திலும் வாக்குப்பதிவு தொடங்கும் மற்றும் முடியும் நேரம் ஒவ்வொரு மாகாணத்திற்கும் மாறுபடும். அந்த மாகாணங்களிலும், தலைநகர் வாஷிங்டன் நகரை சேர்த்து 538 பிரதிநிதிகள் உள்ளனர். அதில் 270 ஓட்டுகளை யார் பெறுகிறார்களோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
இந்நிலையில், வாக்குப்பதிவு முடிந்து, ஓட்டு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இதுவரை வெளிவந்த தகவலின் படி ஹிலாரியே முன்னிலையில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.