எகல் வித்யாலயா அறக்கட்டளை சார்பாக 30 ஆண்டு நிறைவை முன்னிட்டு தன்னம்பிக்கை ஊட்டும் 5 நிமிட விழிப்புணர்வு பாடல் வெளியிடப்படுள்ளது.
எகல் வித்யாலயா அறக்கட்டளை 1986 ஆம் துவங்கப்பட்டது. 30 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் பெயரிய அளவில் செயல்பட்டு கொண்டிருக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறக்கட்டளை கிராம பகுதி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதோடு முக்கியமாக ஊருக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையை பின்பற்றி அனைத்து குழந்தைகளுக்கு கல்வி கற்பித்து வருகின்றனர்.
இதன்மூலம் அவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்ற பாதையை கொடுத்து வருகின்றனர். இந்நிறுவனம் சார்பில் ஐந்து நிமிட விழிப்புணர்வு பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் கடந்த மாதம் வெளியிட்டார்.
இந்த பாடல் நவம்பர் மாதம் 1ஆம் தேதி யூடியுப் தளத்தில் பதிவேற்றப்பட்டது.
சுனாயனா கசாரோ எழுதியுள்ள இந்த பாடலுக்கு, பிரசன்னா இசையில் அனுராதா பலகுர்தி மற்றும் ஹரிஹரன் பாடியுள்ளனர். மேலும் இந்த பாடல் சன்ஜிவ் சர்மா இயக்கியத்தில் ராஜேந்திர சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த பாடல் உங்கள் பார்வைக்காக: