Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குகையில் சிக்கிய அனைவரும் மீட்பு: குதூகலத்தில் தாய்லாந்து மக்கள்

குகையில் சிக்கிய அனைவரும் மீட்பு: குதூகலத்தில் தாய்லாந்து மக்கள்
, செவ்வாய், 10 ஜூலை 2018 (19:43 IST)
தாய்லாந்து நாட்டின் குகைக்குள் 12 சிறுவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் சிக்கி இருந்த நிலையில் கடந்த 16 நாட்களுக்கும் மேலாக அவர்களின் நிலை கேள்விக்குறியாக இருந்தது. குகைக்குள் வெள்ளம் புகுந்ததால் உயிர் பிழைப்போமா என தவித்த அனைவரையும் தாய்லாந்து மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டு விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குகையில் சிக்கியிருந்த 8 பேர் மீட்கப்பட்டு இருந்த நிலையில் மீதியுள்ள நான்கு சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்க மீட்புக்குழுவில் இருந்த வீர்ர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த முயற்சி வெற்றி பெற்றதன் காரணமாக தற்போது குகைக்குள் சிக்கி, உயிருக்கு போராடிய 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகிய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாக தாய்லாந்து அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
 
webdunia
கடைசியாக பயிற்சியாளரும் ஒரு சிறுவரும் குகையை விட்டு வெளியே வந்தபோது, அங்கு கூடியிருந்த உறவினர்களும் குடும்பத்தினரும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.  இதுபோல சிக்கலான குகைக்குள் சிக்கிய, அனைவரையும் உயிர்ச்சேதம் இன்றி மீட்புக்குழுவினர் பத்திரமாக  மீட்கப்பட்டிருப்பது உலக வரலாற்றில் இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே ரிங்.. மிஸ்டு கால்: உஷாரா இருங்க மக்களே...