Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விமானம் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்து ! வீடியோ வெளியானது

Advertiesment
italy
இத்தாலியில் ஒரு ஹெலிகாப்டரும் , சிறிய ரக விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் 7 பேர் பலியான காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஆல்ப்ஸ் மலையில் உள்ள பள்ளத்தாக்கில் ஹெலிகாப்டர் ஒன்று  பறந்துகொண்டிருந்தது. அப்போது அதேபக்கமாக வந்த சிறிய ரக விமானத்துடன் அது மோதியது.
 
இந்த மோதலில் இரண்டுமே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மொத்தம் 7 பேர் பலியாகினர். மேலும் இந்த விபத்து நேருவதற்கு முன்னமே ஹெலிகாப்படரில் பயணம் செய்த இரு பயணிகள் தாங்கல் வைத்திருந்த கேமராவில் இந்த விபத்தைப் படம் பிடித்திருந்தனர்.
 
அந்தக் கேமராவை கைப்பற்றிய போலீஸார் அதில் பதிவாகியிருந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ பரவலாகிவருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல கட்சியின் மகளிர் அணி தலைவி படுகொலை .. அரக்கோணத்தில் பரபரப்பு