Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரண்டாம் உலகப் போரின்போது திருடப்படட ஓவியம்: திருப்பித்தருகிறது ஜெர்மனி

Advertiesment
இரண்டாம் உலகப் போரின்போது திருடப்படட ஓவியம்: திருப்பித்தருகிறது ஜெர்மனி
, திங்கள், 1 ஜூலை 2019 (11:37 IST)
இரண்டாம் உலகப் போரின்போது, இத்தாலியிலிருந்து திருடப்பட்ட பழமையான பூந்தொட்டி ஓவியத்தை திருப்பித் தரவுள்ளது ஜெர்மனி.

டச்சு கலைஞரான ஜான் வான் ஹூய்சூம் என்பவரால், கடந்த 1824 ஆம் ஆண்டு வரையப்பட்ட ஒரு பூந்தொட்டி ஓவியம், உலகப் புகழ்ப் பெற்ற ஒன்று.

விலை மதிப்பற்ற இந்த ஓவியம், இரண்டாம் உலகப் போர் தொடங்கும் வரை இத்தாலியின் புளோரன்ஸ் நகரிலுள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

இரண்டாம் உலகப் போரில் இத்தாலியில் ஊடுறுவிய ஜெர்மனியைச் சேர்ந்த நாஜிக்கள், 1943 ஆம் ஆண்டு அந்த பூந்தொட்டி ஓவியத்தை திருடிச் சென்றனர். அதன்பிறகு ஜெர்மனியின் மறு ஒருங்கிணைப்பிற்கு பிறகும் கூட அந்த ஓவியம் நீண்டகாலம் வெளியே வராமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம், உப்சி அருங்காட்சியக இயக்குனர், ஈக் ஸ்மித், ஜெர்மனியில் உள்ள அந்த பூந்தொட்டி ஓவியத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என முறையிட்டார்.

இதன் பிறகு, தற்போது நாஜிக்களால் திருடப்பட்ட ஓவியம் இத்தாலியிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என ஜெர்மனி தெரிவுத்துள்ளது.

இது தொடர்பாக ஜெர்மன் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ், விரைவில் இத்தாலி செல்கிறார் எனவும், அப்போது அங்குள்ள உப்சி அருங்காட்சியகத்தில் நாஜிக்களால் திருடப்பட்ட, புகழ்பெற்ற பூந்தொட்டி ஓவியத்தை ஒப்படைப்பார் என்றும் அறிவித்துள்ளது.

இரண்டாம் உலகப் போரின் போது, இத்தாலியில் ஊடுறுவிய ஹிட்லரின் நாசிப் படைகள், இத்தாலியில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை பறித்ததோடு, பல பழமையான பொருட்களை அபகரித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமானத்தில் தன்னிலை மறந்து உல்லாசம்: விபரீதத்தில் முடிந்த விசித்திர ஆசை!