ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் சென்ற ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் குழுவினரை ஒரு யானை துரத்திய விவகாரம் வீடியோவாக வெளிவந்துள்ளது.
நடிகர் அர்னால்ட் தற்போது தனது குழுவினருடன் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயனம் செய்து வருகிறார். அவர்கள் சென்று கொண்டிருந்த போது, ஒரு பெரிய யானை அவர்கள் ஜீப்பை வழி மறித்தது.
அதன்பின் அவர்களின் வண்டிக்கு பின்னால் வந்து அவர்களை துரத்தியது. அந்த சம்பவம் வீடியோ எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள அர்னால்ட் “ யானை துரத்துவதை படம் எடுத்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக இருக்காது. அந்த யானையின் அழகை, வலிமையை பார்த்து வியந்து விட்டேன். நாம் விலங்குகளை கொல்லக் கூடாது. அவற்றுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும். விலங்குகளை ரசியுங்கள். தந்தங்களை திருடாதீர்கள்” என்று அறிவுரை கூறியுள்ளார் அர்னால்டு.