ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சி அமைந்ததில் இருந்து பெண்களுக்கு எதிரான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முற்றுகை இட்டிருந்த அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறிய ஒரு மாதத்திலேயே தாலிபன்கள் முழு ஆப்கானிஸ்தானையும் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து மக்கள் பீதிக்குள்ளாகி வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயன்றனர். ஆனால் தாலிபன்கள் தாங்கள் முன்புபோல இல்லாமல் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசாக செயல்படுவோம் என நம்பிக்கை அளித்தனர்.
ஆனால் இப்போது வரை பெண்களின் சுதந்திரத்தில் தலையிடும் பல சட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர். அதில் ஒன்றாக இப்போது 72 கிமீ தூரத்துக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரின் துணை இல்லாமல் செல்லக் கூடாது என சட்டம அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி செல்லும் பெண்களும் ஹிஜாப் அணிந்திருக்க வேண்டுமென்றும், ஆண் துணையற்ற பெண்களை எந்த வாகனத்திலும் ஏற்றக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.