Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மத்திய அரசு யோசித்து செயல்பட வேண்டும்: பெண்கள் திருமண வயது குறித்து விஜயகாந்த்!

மத்திய அரசு யோசித்து செயல்பட வேண்டும்: பெண்கள் திருமண வயது குறித்து விஜயகாந்த்!
, சனி, 18 டிசம்பர் 2021 (12:47 IST)
பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்கும் தேமுதிக வரவேற்பு அளித்தாலும் மத்திய அரசு இதில் யோசித்து நிதானமாக செயல்பட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை தேமுதிக வரவேற்கிறது. இதன் மூலம் கல்வி, வேலை வாய்ப்பில் பெண்கள் முன்னேற்றம் அடைவதுடன் உடல் ரீதியாகவும், மன ரீதியாக அவர்கள் பக்குவம் அடைவார்கள். 
 
சுயமாக சிந்தித்து எதிர்கால வாழ்க்கையை அவர்களால் சுமூகமாக வழிநடத்த முடியும். அதேசமயம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், வரதட்சணை கொடுமை, விவாகரத்துகள் தற்போது அதிகரித்து வருவதாகவும் அவர்களை பாதுகாத்திடும் பொருட்டு கிராமப்புற மக்கள் 18 வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்ய விரும்புகின்றனர். இளம் பெண்களை வீட்டில் வைத்துக்கொண்டு காலம் தாழ்த்த கிராமப்புற மக்கள் விரும்புவதில்லை. 
 
எனவே பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் விவகாரத்தில் மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்த பின்னர் மத்திய அரசு அரசாணை வெளியிட வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் கோடிக்கணக்கான பெண்களின் வாழ்க்கை அடங்கியுள்ளதால் மத்திய அரசு தீர்க்கமான நல்ல முடிவை எடுக்க வேண்டும். 
 
ஓட்டுரிமைக்கு 18 வயது, திருமணத்திற்கு 21 வயதா? என என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. அதேபோல் ஆண்களுக்கான திருமண வயது 21 தானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே ஆண்களுக்கான வயது வரம்பில் மாற்றம் வருகிறதா? என்பது குறித்தும் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்னுயிர் காப்போம் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!