Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓராண்டில் உலகளவில் சுமார் 2,40,000 பேர் வேலை இழப்பு

ஓராண்டில் உலகளவில் சுமார் 2,40,000 பேர் வேலை இழப்பு

Sinoj

, திங்கள், 29 ஜனவரி 2024 (18:11 IST)
உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் கடந்த ஓராண்டில் மட்டும் உலகளவில் சுமார் 2,40,000 பேர் வேலையை இழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

சமீபத்தில், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட், டுவிட்டர், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தன.

சில நாட்களுக்கு  முன்பு ஸ்விகி  நிறுவனத்திலும், பிளிப்கார்டு நிறுவனத்திலும் ஆட்குறைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

இது அந்த ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சுமார் 1900 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அமெரிக்காவில் ஆன்லைன் ஷாப்பிங் தளமமான eBay-வும் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் உலகளவில் சுமார் 2,40,000 பேர் வேலையை இழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளுநருக்கு “மீடியா மேனியா நோய்” தாக்கியுள்ளது - அமைச்சர் ரகுபதி