Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆளுநருக்கு “மீடியா மேனியா நோய்” தாக்கியுள்ளது - அமைச்சர் ரகுபதி

governor ragupathi

Senthil Velan

, திங்கள், 29 ஜனவரி 2024 (17:49 IST)
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு மீடியா மேனியா நோய் தாக்கியுள்ளது போல் தெரிகிறது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
 
நாகையில் தகுதி வாய்ந்த ஏழை மக்கள் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனை பெற முடியவில்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி குற்றம் சாட்டியிருந்தார். 
 
அவருடைய கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநருக்கு மீடியா மேனியா நோய் தாக்கியுள்ளது போல் தெரிகிறது என்று விமர்சித்துள்ளார். மேலும் ஆளுநரின் நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாக, சந்தேகத்துக்குரியதாக அமைந்துள்ளன என்றும் ஆளுநர் தன்னை மன்னர் போல் நினைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் விமர்சித்துள்ளார்.
 
எதன் அடிப்படையில் ஊழல் குற்றச்சாட்டை அவர் கூறுகிறார் என கேள்வி எழுப்பி உள்ள அமைச்சர் ரகுபதி, வீடு சரியில்லை, நிர்வாக அக்கறையின்மை, ஊழல் என வாய்க்கு வந்த வார்த்தைகளை ஆளுநர் பயன்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.
 
அரசின் திட்டம் பற்றி விளக்கம் கேட்காமல் எதிர்க்கட்சியை போல் விமர்சனம் செய்வது ஆளுநருக்கு அழகா? என்று அமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார்.  கீழ்வெண்மணி தியாகிகள் மணிமண்டபத்தை ஆளுநர் கொச்சைப்படுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 
மேலும் யாருடைய பெயர் ஊடகங்களில் அதிகம் வருகிறது என கேரளா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆளுநர்களுக்கிடையே போட்டி நிலவுகிறது என்றும் ஊடகம் வெளிச்சம் பெறவே இத்தகைய செயல்களில் ஆளுநர்கள் ஈடுபடுகின்றனர் என்றும் அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளியே ஆட்டோ.. உள்ளே ஸ்கூட்டி! பேட்மேன் வாகனம் மாதிரி செம மாஸ் – Hero Surge S32 EV!