அமெரிக்காவில் ஃபிஷ் பெடிக்யூர்(மசாஜ்) செய்த பெண்ணிற்கு காலில் உள்ள நகங்கள் உதிர்ந்துபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலான அழகு நிலையங்களில் கால்களில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய ஒரு தொட்டியில் நீரை நிரப்பி அதில் காரா ருஃபா என்ற மீனை அதில் விட்டு, நம் கால்களை தண்ணீரில் ஊற வைப்பார்கள்.
அந்த மீன்கள் நம் கல்களில் உள்ள அழுக்கு, பேக்டீரியா போன்றவற்றை நீக்கி பொலிவுறச் செய்யும். இதற்காகவே பலர் அழகு நிலையங்களுக்கு செல்வார்கள்.
இதேபோல் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஒரு அழகு நிலையத்திற்கு சென்று பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் ஃபிஷ் பெடிக்யூர்(மசாஜ்) செய்துள்ளார். ஆனால் சில நாட்களுக்கு பின்னர் அவரின் கால்களில் இருந்த நகங்கள் உதிரத் தொடங்கின. இதனால் அதிர்ந்துபோன அந்த பெண் மருத்துவரிடம் சென்றுள்ளார்.
இதுகுறித்து கூறிய மருத்துவர் அழகு நிலையங்களில் உள்ள மீன்கள் தினம்தோறும் பல்வேறு நபர்களின் கால்களில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்கின்றன. அதேபோல் மீன்கள் இருக்கும் தண்ணீரையும் உடனுக்குடன் மாற்றி சுத்தப்படுத்துவது இல்லை. இதனால் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய் கிருமிகள் பரவ வாய்ப்பிருப்பதால் தான் அந்த பெண்ணிற்கு இப்படி நடந்தது என கூறினார்.
எனவே இனிமேல் அழகு நிலையங்களுக்கு ஃபிஷ் பெடிக்யூருக்கு(மசாஜ்) செல்வோர் இதனை மனதில் வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.