Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 12 January 2025
webdunia

சென்னையில் கோரம்.. 9வது மாடியிலிருந்து குதித்து ஐடி நிறுவன பெண் ஊழியர் தற்கொலை

Advertiesment
சென்னையில் கோரம்.. 9வது மாடியிலிருந்து குதித்து ஐடி நிறுவன பெண் ஊழியர் தற்கொலை
, செவ்வாய், 3 ஜூலை 2018 (08:11 IST)
சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் பெண் ஊழியர் ஒருவர் ஆஃபிஸின் 9 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார் பிரியங்கா என்ற இளம்பெண். 
 
பற்பல ஆசைகளோடும் கனவுகளோடும் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடும் இருந்த அந்த இளம்பெண் நேற்று மாலை திடீரென ஆஃபிஸின் 9 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரியங்கா வேலைப் பளுவின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது உயரதிகாரிகளின் நெருக்கடியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோர சம்பவத்தால் பிரியங்காவின் பெற்றோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸ் பெண் செய்தி தொடர்பாளரின் மகளுக்கு கற்பழிப்பு மிரட்டல்