Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆபாச படங்களுக்கு அடிமையான பெண்; வியக்க வைக்கும் வாழ்க்கை வரலாறு

Advertiesment
ஆபாச படங்களுக்கு அடிமையான பெண்; வியக்க வைக்கும் வாழ்க்கை வரலாறு
, திங்கள், 12 பிப்ரவரி 2018 (11:24 IST)
அமெரிக்காவில் பெண் ஒருவர் ஆபாச படங்களுக்கு அடிமையாகி பின் அந்த பழக்கத்திலிருந்து மீண்டதை புத்தகமாக எழுதியுள்ளார். 
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் ஏரிகா கார்சா(35). இவர் தனது 12 வது வயதிலிருந்து ஆபாச படங்களை பார்க்க தொடங்கி, அந்த பழக்கத்தை விட முடியாமல் பல வருடங்கள் தவித்து வந்துள்ளார். அதன் காரணமாக அவரது 17 வது வயதிலேயே கன்னித் தன்மையை இழந்துள்ளார்.
webdunia

 
இதனால் ஏரிகாவின் 25 வது வயதில் அவரின் பெற்றோர்கள் ஏரிகாவிற்கு திருமணம் செய்ய நினைத்து மாப்பிள்ளை தேடினர். ஏரிகாவின் பழக்கத்தை தெரிந்து கொண்டு யாரும் அவரை திருமணம் செய்ய முன்வரவில்லை. ஆபாச படம் பார்க்கும் பழக்கத்தை கைவிட ஏரிகா கார்சா பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பாலி நாட்டை சேர்ந்த வில்லோ நெல்சன் என்ற நபர் ஏரிகாவை அந்த பழக்கத்திலிருந்து மீட்க மருத்துவ உதவிகள்  செய்து உதவினார். பின்னர் ஏரிகாவுக்கும் வில்லோவும் காதலித்து வந்தனர்.
webdunia
இதனையடுத்து ஏரிகா தனது 32 வது வயதில் வில்லோ நெல்சனை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தற்பொழுது குழந்தை பிறந்து சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். தன்னைப் போல் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்க தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி  வெளியிட்டிருக்கிறார் ஏரிகா கார்சா.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலி அதிகாரியை தீபா வீட்டிற்கு அனுப்பிய விவகாரம் - மாதவன் தலைமறைவு