Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போலி அதிகாரியை தீபா வீட்டிற்கு அனுப்பிய விவகாரம் - மாதவன் தலைமறைவு

Advertiesment
போலி அதிகாரியை தீபா வீட்டிற்கு அனுப்பிய விவகாரம் - மாதவன் தலைமறைவு
, திங்கள், 12 பிப்ரவரி 2018 (11:12 IST)
ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவின் வீட்டிற்கு, ஒரு போலி வருமான வரித்துறை அதிகாரியை அனுப்பி வைத்த விவகாரத்தில், தீபாவின் கணவர் மாதவன் தலைமறைவாகி விட்டார்.

 
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரி போல் நாடகமாடிய மர்ம நபரை கடந்த இரண்டு நாட்களாக போலீசார் தேடி வந்த நிலையில் நேற்றிரவு அவர் மாம்பலம் போலீசில் சரண் அடைந்தார். பிரபாகரன் என்ற பெயரை கொண்ட அந்த நபர் போலீஸ் விசாரணையின்போது தன்னை வருமான வரித்துறை அதிகாரி போல் நடிக்க சொன்னது தீபாவின் கணவர் மாதவன்தான் என வாக்குமூலம் அளித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
மேலும் தன்னை திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக கூறி மாதவன் தான் தனக்கு போலி ஐடி அதிகாரி அடையாள அட்டையை அனுப்பி வைத்ததாகவும் விசாரணையின் போது கூறியுள்ளார்.
 
அதேபோல், போலீஸ் விசாரணையின்போது தனக்கு வருமான வரித்துறை அதிகாரி வந்தபோது எந்த சந்தேகமும் எழவில்லை என்று மாதவன் கூறியிருந்தார். 
 
இந்நிலையில், மாதவனிடம் விசாரணை நடத்த போலீசார் முயன்றனர். ஆனால், அவர் தலைமறைவாகி விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாதவன்தான் அப்படி நடிக்க சொன்னார் - தீபா வீட்டிற்கு சென்ற போலி அதிகாரி தகவல்