Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தூண்டிலில் சிக்கிய ராட்சத சுறா: நூலிழையில் தப்பித்த குடும்பம் – வீடியோ

Advertiesment
தூண்டிலில் சிக்கிய ராட்சத சுறா: நூலிழையில் தப்பித்த குடும்பம் – வீடியோ
, திங்கள், 22 ஜூலை 2019 (19:58 IST)
அமெரிக்காவில் மீன் பிடிக்க போட்ட தூண்டிலை பிடித்து கொண்டு ராட்சத சுறாமீன் ஒன்று தாக்க வந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் பகுதியில் டாக் நெல்சன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் படகில் சுற்றுலா சென்றுள்ளனர். அங்குள்ள அட்லாண்டிக் கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்காக தூண்டில் போட்டுள்ளனர். ஏதோ மீன் ஒன்று சிக்கவும் தூண்டிலை கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துள்ளனர். தூண்டில் அருகே வர வர ஏதோ ராட்சத உருவம் தண்ணீருக்குள்ளிருந்து வருவது அவர்களுக்கு தெரிந்தது.

கண்ணிமைக்கும் பொழுதில் ராட்சத வெள்ளை சுறா ஒன்று தண்ணீருக்கு மேல் எழும்பி படகின்மேல் நீரை வாரியடித்தவாறு மீண்டும் தண்ணீருக்குள் சென்றது. அது தொலைவில் வரும்போதே உஷாராகி பின் வாங்கியதால் அந்த குடும்பத்தினர் தப்பித்தனர். படகில் விளிம்பில் நின்ரு கொண்டிருந்த சிறுவன் கொஞம் தவறியிருந்தாலும் தண்ணீரில் விழுந்து சுறாவுக்கு இரையாகியிருக்க நேரிட்டிருக்கும். நூலிழையில் அந்த குடும்பத்தினர் தப்பித்தனர்.

சுறா மீன் தாக்கிய அந்த வீடியோவை அட்லாண்டிக் வெள்ளை சுறா பாதுகாப்பு அமைப்பு தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. கடல்சார் ஆர்வலர்கள் சிலர் “சுறாக்கள் தூண்டில் புழுக்களுக்காக வரக்கூடியவை அல்ல. தூண்டிலி சிக்கிய மீனை பிடிப்பதற்காக தூண்டிலை தொடர்ந்து வந்து கவ்விய சமயத்தில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கலாம்” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அத்திவரதரை குளத்தில் வைக்க கூடாதா? ஜூயர் எச்சரிக்கைக்கு அமைச்சர் பதில்!