ரப்பர் தோட்டத்தில் பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (23:18 IST)
இந்தோனேஷியா நாட்டில், ஜாம்பி என்ற  பகுதியில் வசித்து வந்தவர் ஜஹ்ரா(52). இவர், கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று அங்குள்ள பிரபலமான ஒரு ரப்பர் தோட்டத்திற்கு பணிக்குச் சென்றுள்ளார்.

அன்று மாலை அவர் பணி முடிந்து வீட்டிற்குச் செல்லவில்ல்லை என்பதால்  உறவினர்கள் இதுகுறித்து தோட்டத்திற்கு வந்து கேட்டும், உறவினர்கள் வீட்டுகளிலும் விசாரித்து, தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில்,  ரப்பர் தோட்டத்திற்கு அருகில் ஒரு 16 அடி நீளம் மலைப்பாம்பு உடல் பருமனுடன் எதோயோ விழுங்கிவிட்டு நகர முடியாமல் கிடந்துள்ளது. ஒருவேளை பெண்ணை மலைப்பாம்பு விழுங்கியிருக்கலாம் என சந்தேகம் அடைந்த உறவினர்கள், அதன் வயிற்றைக் கிழித்துப் பார்த்தனர்.

அதற்குள், ஜஹ்ரா பிணமாகக் கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதறி அழுதனர். இந்தச்சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018 ஆம் அந்த நாட்டில் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

 Edited by Sinoj

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்.டி.ஏ கூட்டணிக்கு ஆதரவு.. டிடிவி தினகரன் அறிவிப்பு.. திமுகவில் இணைந்த வைத்திலிங்கம்.. சூடுபிடிக்கும் கூட்டணி கணக்குகள்..!

படுபாதாளத்திற்கு சென்றது இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம்..!

பல ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன இந்திரா காந்தி கணவரின் முக்கிய ஆவணம்.. ராகுல் காந்தியிடம் ஒப்படைப்பு..!

கையில் சிகரெட்.. 190 கிமீ வேகத்தில் சென்ற காரை ஓட்டிய 19 வயது இளைஞர்.. பரிதாபமாக பலியான 4 உயிர்கள்..!

ஓபிஎஸ் அணியில் இன்னொரு விக்கெட் காலி.. திமுக இணையவிருக்கும் முக்கிய புள்ளி..!

அடுத்த கட்டுரையில்
Show comments