Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வானத்தில் தோன்றிய பிரமிடு! – அமெரிக்காவில் ஆச்சர்யம்!

Advertiesment
வானத்தில் தோன்றிய பிரமிடு! – அமெரிக்காவில் ஆச்சர்யம்!
, வெள்ளி, 8 நவம்பர் 2019 (17:29 IST)
அமெரிக்காவில் வானத்தில் திடீரென பிரமிடு உருவம் ஒன்று வானத்தில் பிரகாசமாக தெரிந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இரவு நேரத்தில் ஆரஞ்சு நிற ஒளியுடன் வானத்தில் ஒரு உருவம் தோன்றியுள்ளது. அது பார்ப்பதற்கு எகிப்தில் உள்ள பிரமிடு போலவே இருப்பதை கண்டு மக்கள் ஆச்சர்யமடைந்தனர். பலர் அந்த காட்சியை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இதனால் வானத்தில் தோன்றிய அந்த பிரமிடு போன்ற உருவம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. சதிக் கோட்பாட்டாளார்கள் சிலர் அவை ஏலியனின் விண்கலமாக இருக்கலாம் என கூறி வருகின்றனர். ஆனால் ஆய்வாளர்கள் சிலர் அதற்கான தர்க்கரீதியான முடிவுகளை அறிய தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தர்பாருக்கு தூபம் போட்ட ரஜினி... எல்லாம் ப்ரமோஷ்னல் ட்ரிக்ஸ்!