தீவு நாடான தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ள நிலையில் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் இன்று காலை ரிக்டர் அளவில் 72 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகரின் பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில், ரயில்களில் நிலநடுக்கத்தின்போது பதிவு செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் பலர் அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் மேற்கு கடலோர பிராந்தியமான ஒகினாவாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
கடந்த 1999ம் ஆண்டுக்கு பிறகு 25 ஆண்டுகளில் தைவானில் ஏற்படும் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என குறிப்பிடப்பட்டுள்ளது.